sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


UPDATED : மார் 06, 2026 10:34 AM

ADDED : மார் 06, 2026 10:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 06, 2026 10:34 AM ADDED : மார் 06, 2026 10:40 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

குறிஞ்சிப்பாடி:
சிதம்பரம், அண்ணாமலை நகரில் உள்ள முத்தையா பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த, 1988 - 1991ம் ஆண்டு காலகட்டத்தில் பல்வேறு துறைகளில் படித்த, முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா, குறிஞ்சிப்பாடி அடுத்த பெரிய கண்ணாடி கிராமத்தில் நடந்தது.

இந்த நிகழ்வில் முன்னாள் மாணவர்கள் மற்றும், அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். விழாவிற்கு வந்தவர்களை பொன்மொழி வரவேற்றார்.

சென்னை போலீஸ் தலைமை அலுவலகத்தில் காவல்துறை தலைவருக்கு நேர்முக உதவியாளராக பணியாற்றும் சரவணபெருமாள் ஒருங்கிணைத்தார். விழா நிகழ்வுகளை திலகவதி, ஜெயந்தி தொகுத்து வழங்கினர். நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு ராஜன் பாபு, ஸ்ரீராம தேசிகன், சந்திரசேகர், மீனாட்சி சுந்தரேஸ்வரன் அன்பளிப்பு வழங்கினர்.

பண்ருட்டி, அன்னை வேளாங்கண்ணி பாலிடெக்னிக் இயந்திரவியல் துறை தலைவர் கிருபாநதி உட்பட மத்திய, மாநில அரசு மற்றும் தனியார் துறைகளில் பல்வேறு நிலைகளில் பணியாற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

என்.எல்.சி., அதிகாரி ஆனந்த பிரசாத் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை பொன்மொழி, பொறியாளர் அருள் செல்வம், தொழிலதிபர் ராஜன் பாபு, என்.எல்.சி., அதிகாரிகள் வாசுதேவன், அன்பழகன் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us