முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா; படித்த பள்ளியை மேம்படுத்த உறுதி
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா; படித்த பள்ளியை மேம்படுத்த உறுதி
UPDATED : ஏப் 11, 2025 12:00 AM
ADDED : ஏப் 11, 2025 10:28 PM
மைசூரு:
அரசு தமிழ்ப் பள்ளியில் நடந்த சந்திப்பு நிகழ்வில், தாங்கள் படித்த பள்ளியை மேம்படுத்துவதாக முன்னாள் மாணவ - மாணவியர் உறுதி அளித்தனர்.
மைசூரு, சாமராஜ்புரம், வாணிவிலாஸ் சாலையில் அமைந்துள்ள அரசு தமிழ்ப் பள்ளியில் நேற்று முன்தினம் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா நடந்தது. மைசூரு கல்வித்துறையின் தெற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீகண்ட சுவாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மைசூரு தமிழ்ச்சங்க தலைவர் பிரான்சிஸ் தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியை வள்ளி வரவேற்றார். மைசூரு தமிழ்ச்சங்க பொதுச்செயலர் வெ.ரகுபதி மற்றும் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
பள்ளி முன்னாள் மாணவ - மாணவியர் பலரும், காரைக்குடி, தர்மபுரி, திருப்பூர், நஞ்சன்கூடு என பல ஊர்களில் இருந்தும் வந்திருந்தனர். விழாவில், பள்ளியில் படித்தபோது, ஆசிரியர்கள், சக நண்பர்களுடனான மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
மாணவர்களுக்கு ஒழுக்கம் குறித்த நற்கருத்துகளை எடுத்து உரைத்தனர். ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கினர். பள்ளிக்கு தேவையான பல விளையாட்டு உபகரணங்களை வழங்கினர். புதிய மாணவர் சேர்க்கைக்கும், பள்ளியின் முன்னேற்றத்திற்கும் தங்களால் இயன்ற உதவிகளை செய்வதாக உறுதியளித்தனர்.

