தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி நாட்கள் மீண்டும் வராதா? ஏங்கிய முன்னாள் மாணவர்கள்

பள்ளி நாட்கள் மீண்டும் வராதா? ஏங்கிய முன்னாள் மாணவர்கள்

பள்ளி நாட்கள் மீண்டும் வராதா? ஏங்கிய முன்னாள் மாணவர்கள்


UPDATED : ஜூலை 21, 2026 04:36 AM

ADDED : ஜூலை 21, 2026 04:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 21, 2026 04:36 AM ADDED : ஜூலை 21, 2026 04:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
வெள்ளலுார் எல்.ஜி.மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், 2001ம் ஆண்டு பிளஸ் 2 படித்த மாணவர்களின் முதல் சந்திப்பு கூட்டம், சுங்கம் பகுதியில் உள்ள 'பார்ம் ஸ்டெட்' ஹவுசில் நடந்தது.

90க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ, மாணவிகள் சந்தித்தனர். பாடம் கற்பித்த ஆசிரியர்கள் 20 பேர் வந்திருந்தனர். 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து கொண்டதில் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஒருங்கிணைப்பாளர் பூங்கொடி கூறியதாவது:



எங்கள் வாழ்நாளில் இது முக்கியமான நாள். 25 ஆண்டுகளுக்கு பிறகு இத்தனை பேர் ஒன்றாக சேர்ந்தது மகிழ்ச்சியாக உள்ளது. வெளிநாடுகளில் இருந்தும், பிறமாநிலங்களில் இருந்தும் பலர் வந்துள்ளனர். எங்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்களும் வந்துள்ளனர்.

பாடத்தை சரியாக படிக்காததால், அவர்களிடம் அடி வாங்கியது, திட்டு வாங்கியதை எல்லாம் இப்போது நினைக்கும் போது இனிமையான நினைவாக இருக்கிறது. பள்ளி நாட்கள் மீண்டும் வராதா என்று ஏக்கமாக இருக்கிறது.

இப்போது நாங்கள் நல்ல நிலையில், உயர்ந்த பதவிகளில் இருக்க காரணம் எங்கள் ஆசிரியர்கள் தான். இனி ஒவ்வொரு ஆண்டும் எங்கள் சந்திப்பு நடக்கும்.

இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us