sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இணைய தொடர்பு சேவைக்கான செயற்கைக்கோள்களை ஏவிய அமேசான்

இணைய தொடர்பு சேவைக்கான செயற்கைக்கோள்களை ஏவிய அமேசான்

இணைய தொடர்பு சேவைக்கான செயற்கைக்கோள்களை ஏவிய அமேசான்


UPDATED : ஏப் 30, 2025 12:00 AM

ADDED : ஏப் 30, 2025 06:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 30, 2025 12:00 AM ADDED : ஏப் 30, 2025 06:13 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நியூயார்க்:
பிரபல அமெரிக்க நிறுவனமான, அமேசான் நேற்று தனது முதல், இன்டர்நெட் இணைப்பு வழங்கும் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியது. அது, எலான் மஸ்க் தலைமையிலான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க்ஸ் செயற்கைக்கோள் இணையதள நிறுவனத்திற்கு போட்டியாக கருதப்படுகிறது.

இந்த மாத துவக்கத்தில், அமேசான் நிறுவனம் தன், புளூ ஆரிஜின் என்ற துணை நிறுவனம் வாயிலாக, புராஜக்ட் குய்பெர் என்ற பெயரில், செயற்கைக்கோள் வாயிலாக இன்டர்நெட் இணைப்பு வழங்கும் முயற்சியை துவக்கியது. மோசமான வானியால் அந்த முயற்சி தோல்வி அடைந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின், கேப் கேனவரல் ஸ்பேஸ் போர்ஸ் ஸ்டேஷன் என்ற இடத்திலிருந்து, யுனைடெட் லாஞ்ச் அலையன்ஸ் அட்லஸ் 5 ராக்கெட் வாயிலாக, 27 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி, இன்டர்நெட் இணைப்பு வழங்கும் முயற்சியை அமேசான் வெற்றிகரமாக துவக்கியது.

அந்த நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ் தலைமையிலான புளூ ஆரிஜின் நிறுவனம், குய்பெர் திட்டம் வாயிலாக, 3,200 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.

குறைந்த கட்டணத்தில், விரைவான இன்டர்நெட் இணைப்பு வழங்கப்படும் என அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. திட்டமிட்டபடி எல்லாம் முறையாக நடந்தால், இந்த ஆண்டின் இறுதியில் இருந்து செயற்கைக்கோள் வாயிலாக இன்டர்நெட் இணைப்பை, அமேசான் நிறுவனம் வழங்கும்.

கடந்த 2019 முதல், எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க்ஸ் நிறுவனம், 8000 செயற்கைக்கோள்கள் வாயிலாக இன்டர்நெட் இணைப்பை, உலகம் முழுவதும் வழங்கி வருகிறது.

அதற்கு போட்டியாக, புளூ ஆரிஜின் நிறுவனத்தின் புராஜக்ட் குய்பெர், அமெரிக்காவின் பிரபல ராக்கெட் ஏவும் நிறுவனமான, யுனைடெட் லாஞ்ச் அலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, ஏராளமான செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us