டாக்டர்கள் வெங்கடேஷ், அரவிந்த் ஹரிபிரியாவுக்கு அமெரிக்க அமைப்பின் விருதுகள் அறிவிப்பு
டாக்டர்கள் வெங்கடேஷ், அரவிந்த் ஹரிபிரியாவுக்கு அமெரிக்க அமைப்பின் விருதுகள் அறிவிப்பு
UPDATED : பிப் 14, 2026 02:11 PM
ADDED : பிப் 14, 2026 02:12 PM

புதுச்சேரி:
அமெரிக்கா கண்புரை மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை சங்கம் (ASCRS) டாக்டர்கள் அரவிந்த் ஹரிபிரியா, வெங்கடேஷ் ஆகியோருக்கு 2026ம் ஆண்டிற்கான மனிதாபிமான விருது அறிவித்துள்ளது.
அமெரிக்கா கண்புரை மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை சங்கம், கண்புரை காரணமாக ஏற்படும் பார்வை இழப்பைத் தடுக்க உதவும் மனிதாபிமான சேவைக்காக இரண்டு டாக்டர்களுக்கு மனிதாபிமான விருது வழங்கி வருகிறது. 2026ம் ஆண்டுக்கான விருது டாக்டர்கள் அரவிந்த் ஹரிபிரியா, வெங்கடேஷ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அரவிந்த் அமைப்பில் டாக்டர் ஹரிபிரியா, குழந்தை கண் மருத்துவத்தில் பணியாற்றினார். பின், டாக்டர் நாச்சியார் வழிகாட்டுதல்படி கண்புரை மற்றும் ஐ.ஓ.எல்., பிரிவில் சேர்ந்தார். அதிக நோயாளிகள் வருகை தரும் அமைப்பில் பணியாற்றுவது, நோயாளிகளுக்கான முறைகளை மேம்படுத்தினார்.
டாக்டர் வெங்கடேஷ் 1997ல் ரெசிடென்சி முடித்து கண்புரை பிரிவில் சேர்ந்தார். அதிக அளவு அறுவை சிகிச்சைகள் செய்ததுடன், தரத்தை மையமாகக் கொண்டு எம்.எஸ்.ஐ.சி.எஸ்., தொழில்நுட்பத்தை இளம் டாக்டர்களுக்கு பயிற்சி அளித்தார்.
கடந்த 23 ஆண்டுகளாக புதுச்சேரியில் சேவை செய்து வருகிறார். கண் சங்கங்கள் மற்றும் டாக்டர்களின் உலகளாவிய கூட்டணியின் ஆலோசனை குழு உறுப்பினராக உள்ளார்.
விருது அறிவிக்கப்பட்ட இருவரும் ஆயிரக்கணக்கான நோயாளிகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
தொலைதுார கிராமங்களில் இலவச அறுவை சிகிச்சை மூலம் பலருக்கு மீண்டும் பார்வை கிடைக்க செய்துள்ளனர்.

