தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொறுப்பில்லாத பொறுப்பு அமைச்சர்: சிறு, குறு தொழில் சங்கங்கள் குமுறல்

பொறுப்பில்லாத பொறுப்பு அமைச்சர்: சிறு, குறு தொழில் சங்கங்கள் குமுறல்

பொறுப்பில்லாத பொறுப்பு அமைச்சர்: சிறு, குறு தொழில் சங்கங்கள் குமுறல்


UPDATED : செப் 10, 2026 11:13 AM

ADDED : செப் 10, 2026 11:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 10, 2026 11:13 AM ADDED : செப் 10, 2026 11:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் கீர்த்தனா மூன்று முறை வருகை தந்தும், சிறு, குறு தொழில் சங்கத்தினரை அழைத்து பேசவில்லை என, தொழில்முனைவோர் அதிருப்தியடைந்து உள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூர் நகரம், கர்நாடகாவின் பெங்களூருக்கு இணையாக வளர்ந்து வருகிறது. ஓசூரிலுள்ள சிட்காப் தொழிற்பேட்டைகள், சிட்கோக்கள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கிட்டத்தட்ட 3,000த்துக்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள், 150க்கும் மேற்பட்ட பெரிய நிறுவனங்கள் உள்ளன. அங்கு, லட்சக்கணக்கானோர் பணி செய்கின்றனர்.

இங்குள்ள சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு கோரிக்கைகள் ஏராளமாக உள்ளன. த.வெ.க., அரசில், இம்மாவட்ட பொறுப்பு அமைச்சராக, தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மூலமாக, அரசின் கவனத்திற்கு தங்கள் கோரிக்கைகளை கொண்டு சென்று, தீர்வு ஏற்படுத்த, சிறு, குறு மற்றும் நடுத்தர சங்கங்களின் பிரதிநிதிகள் நினைத்தனர்.

அரசு அமைந்து, 100 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், பொறுப்பு அமைச்சர் கீர்த்தனா, மூன்று முறை கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். ஆனால், ஓசூர் சிறு, குறு, நடுத்தர சங்கங்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள், தொழில்முனைவோரை நேரில் அழைத்து பேசவில்லை. இதனால் சிறு, குறு, நடுத்தர சங்கங்களின் பிரதிநிதிகள் புலம்பி வருகின்றனர்.

ஓசூரில் விமான நிலையம், கர்நாடகா - ஓசூர் இடையே மெட்ரோ ரயில் சேவை, மின் கட்டணம் குறைப்பு, சிப்காட், சிட்கோ தொழிற்பேட்டைகளில் குடிநீர், சாலை, தெருவிளக்கு வசதிகள், வர்த்தக மையம், பெரிய நிறுவனங்கள் வழங்கும் ஆர்டர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்துவது போன்ற, பல்வேறு கோரிக்கைகள் உள்ளன.

அப்படி இருந்தும், பொறுப்பு அமைச்சர் தொழில்துறையை கவனித்தும், தங்களை அழைத்து பேச முன்வரவில்லை என, அவர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us