UPDATED : டிச 15, 2025 08:03 AM
ADDED : டிச 15, 2025 08:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
தமிழகம் முழுதும் செயல்படும் 2,561 சமூக நீதி விடுதிகளில் கள ஆய்வு நடத்த, கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், 1,216; பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ், 1,345 விடுதிகள் என, 2,561 சமூக நீதி விடுதிகள் செயல்படுகின்றன.
இவ்விடுதிகளை புதுப்பிக்கவும், அடிப்படை வசதிகள் செய்யவும் அரசு முடிவு செய்துள்ளது.
அதனால், விடுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டு, 15 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்க, ஊரக வளர்ச்சித் துறை சார்பில், கலெக்டர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

