தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அனா... ஆவன்னா... அரிச்சுவடி ஆரம்பம்; விறுவிறுப்பான முன்பதிவு

அனா... ஆவன்னா... அரிச்சுவடி ஆரம்பம்; விறுவிறுப்பான முன்பதிவு

அனா... ஆவன்னா... அரிச்சுவடி ஆரம்பம்; விறுவிறுப்பான முன்பதிவு


UPDATED : அக் 01, 2026 06:49 PM

ADDED : அக் 01, 2026 06:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 01, 2026 06:49 PM ADDED : அக் 01, 2026 06:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ், 'வேலம்மாள் நியூ ஜென் கிட்ஸ்' சார்பில், விஜயதசமியையொட்டி, 2 முதல் 4 வயது குழந்தைகளுக்கு 'அ'கரம் கற்பிக்கும் 'அ'னா... 'ஆ'வன்னா... அரிச்சுவடி ஆரம்பம்' என்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியை நடத்துகிறது. இதில் பங்கேற்க குழந்தைகளின் பெற்றோர் இப்போதே முன்பதிவு செய்யலாம்.

விஜயதசமி நாளில் குழந்தைகளின் கல்விப் பயணத்தை தொடங்கும் விதமாக, நெல் மணி நிரம்பிய தாம்பாளத்தில் பிஞ்சு விரல் பிடித்து 'அ'கரம் எழுத வைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கல்வியாளர்கள், பல்துறை வல்லுநர்கள், பிரபல கலைஞர்கள் பங்கேற்று, குழந்தைகளுக்கு அரிச்சுவடி கற்பிக்க உள்ளனர்.

குழந்தைகளின் எதிர்கால கல்விக்கு வலுவான அடித்தளம் அமைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியில், பெற்றோர் தங்கள் செல்லக் குழந்தைகளுடன் பங்கேற்கலாம். குழந்தையின் முதல் எழுத்தறிவு அனுபவத்தை சிறப்பிக்கும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

எங்கு, எப்போது?


வடபழனி முருகன் கோவில், சூரப்பட்டு வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளி வளாகம், தாம்பரம் ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மாம்பாக்கம் வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளி வளாகம், படப்பை வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளி வளாகம் ஆகிய ஐந்து மையங்களில், வரும் 20ம் தேதி காலை 7:31 முதல் 10:30 மணி வரை நிகழ்ச்சி நடக்கிறது.

பரிசுகள்


நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைத்து குழந்தைகளுக்கும், 1,000 ரூபாய் மதிப்புள்ள பிரத்யேக டி - ஷர்ட், அறிவை வளர்க்கும், 'லேர்னிங் கிட்' மற்றும் குழந்தை முதன்முறையாக அரிச்சுவடி எழுதிய தருணத்தை பதிவு செய்யும் புகைப்படத்துடன் கூடிய சான்றிதழ் வழங்கப்படுகிறது.

முன்பதிவு எப்படி?


நிகழ்ச்சிக்கான கியூ.ஆர்., குறியீட்டை ஸ்கேன் செய்து, தங்களுக்கு அருகில் உள்ள மையத்தை தேர்வு செய்து, குழந்தை மற்றும் பெற்றோரின் விபரங்களை பதிவு செய்து இடத்தை உறுதி செய்யலாம். மேலும் விபரங்களுக்கு, 81229 71772, 81483 01771 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த நிகழ்ச்சியின், 'சேனல் பார்ட்னர்' ஆக 'தமிழ் ஜனம்' செய்தி தொலைக்காட்சி இணைந்துள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us