UPDATED : நவ 03, 2026 03:11 PM
ADDED : நவ 03, 2026 03:12 PM
கோவை:
கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லுாரியில், இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு எழுதிய, 'வெள்ளோட்டம் வெல்லட்டும்' நுால் அறிமுக விழா நடந்தது.
கல்லுாரி நிறுவனர் தலைவர் பொங்கலூர் பழனிசாமி தலைமை வகித்தார். ரூட்ஸ் நிறுவன மனிதவள இயக்குநர் கவிதாசன் நுால் அறிமுக உரையாற்றினார். புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும்போது தோல்விகள் ஏற்பட்டாலும், அதற்கான காரணங்களைக் கண்டறிந்து மீண்டும் முயற்சி செய்ய வேண்டும் என்பதை இந்நூல் விளக்குவதாக குறிப்பிட்டார்.
நுாலாசிரியர் சிறப்புரையாற்றி, ராணுவ அறிவியல், பாதுகாப்புத் தொழில்நுட்பம், அறிவியல் கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். தோல்விகளைக் கண்டு முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து செயல்பட்டால் வெற்றி பெறலாம் என, மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
