UPDATED : ஜன 27, 2026 09:49 AM
ADDED : ஜன 27, 2026 09:50 AM
காஞ்சிபுரம்:
குடியரசு தின விழாவையொட்டி, காஞ்சிபுரம் அடுத்த கீழம்பியில் எஸ்.எஸ்.கே.வி., மகளிர் கல்லுாரியில் பழங்கால நாணய கண்காட்சி நேற்று நடந்தது.
கல்லுாரி முதல்வர் திருமாமகள் தலைமை வகித்தார். காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் உமா சங்கர் முன்னிலை வகித்தார். காஞ்சி அன்னசத்திரம் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வன் வரவேற்றார்.
சங்ககாலம், பல்லவர், சேரர், சோழர், பாண்டியர், ரோமானியர், பிரெஞ்சு, பிரிட்டீஷ் காலத்தைச் சேர்ந்த பழமையான தங்கம், வெள்ளி, நாணயங்கள் மற்றும் தொன்மை பொருட்கள், வெளிநாட்டுப் ரூபாய் நோட்டுகளை கண்காட்சியல் காட்சிப் படுத்தி இருந்தர்.
இதில், கல்லுாரி மாணவியர், பேராசிரியர்கள், கீழம்பி கிராமத்தினர் கண்காட்சியை பார்வையிட்டனர். தொல்லியல் ஆய்வாளர் ராசு ஜவகர் பாபு கண்காட்சிக்கான ஏற்பாட்டை செய்திருந்தார்.

