சர்வதேச கிக் பாக்ஸிங் போட்டிக்கு ஆண்டிபட்டி மாணவர்கள் தேர்வு
சர்வதேச கிக் பாக்ஸிங் போட்டிக்கு ஆண்டிபட்டி மாணவர்கள் தேர்வு
UPDATED : ஜன 06, 2026 07:07 PM
ADDED : ஜன 06, 2026 07:08 PM
ஆண்டிபட்டி:
தேனி மாவட்ட அமெச்சூர் கிக் பாக்சிங் அசோசியேசன் சார்பில் பயிற்சி பெற்ற 6 மாணவ, மாணவிகள் சர்வதேச அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கிக் பாக்சிங் அசோசியேசன் செயலாளர் துரைமுருகன் கூறியதாவது:
சர்வதேச அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி பிப்ரவரி 4 முதல் 8 வரை டில்லியில் உள்ள இந்திரா காந்தி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்கள் தரவரிசைப்படி, ஆண்டிபட்டியில் இருந்து 6 பேர் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் பெற்றுள்ளனர்.
சர்வதேச அளவில் சிறுவர்களுக்கான பிரிவில் யாழினி, சம்சிதா, சப்- ஜூனியர் பிரிவில் கிருபாஸ்ரீ, வசுமதி, ரிகாஸ்ரீ, சீனியர் பிரிவில் சபரீஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வான மாணவர்களை தேனி மாவட்ட அமெச்சூர் கிக் பாக்சிங் அசோசியேஷன் தலைவர் மகாராஜன், செயலாளர் மற்றும் பயிற்சியாளர் துரைமுருகன், துணை பயிற்சியாளர் ஜெயவேல் உட்பட பல பாராட்டினர்.
