தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அண்ணா பல்கலை பேட்மின்டன் சாய்ராம் இரட்டை சாம்பியன்

அண்ணா பல்கலை பேட்மின்டன் சாய்ராம் இரட்டை சாம்பியன்

அண்ணா பல்கலை பேட்மின்டன் சாய்ராம் இரட்டை சாம்பியன்


UPDATED : செப் 24, 2026 04:33 PM

ADDED : செப் 24, 2026 04:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 24, 2026 04:33 PM ADDED : செப் 24, 2026 04:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
அண்ணா பல்கலை நான்காவது மண்டல பேட்மின்டன் போட்டியில், சாய்ராம் கல்லுாரி இருபாலரிலும் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.

அண்ணா பல்கலையின் நான்காவது மண்டல பேட்மின்டன் போட்டி, செங்கல்பட்டு, காட்டாங்கொளத்துார், வள்ளியம்மை கல்லுாரியில் நேற்று நிறைவடைந்தது. போட்டியில், எம்.ஐ.டி., - தாகூர் உள்ளிட்ட 13 கல்லுாரி அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

ஆண்கள் பிரிவு இறுதி போட்டியில், ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லுாரி மற்றும் எஸ்.ஆர்.எம்., வள்ளியம்மை பொறியியல் கல்லுாரி அணிகள் மோதின. ஐந்து ஆட்டங்களில் மூன்று வெற்றி என்ற முறையில் நடைபெற்ற போட்டியில், ஸ்ரீசாய்ராம் அணி தொடர்ந்து மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்று, 3 - 0 என்ற புள்ளிக்கணக்கில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

மேற்கு தாம்பரம் சாய்ராம் கல்லுாரி வளாகத்தில் நடந்த பெண்கள் பிரிவிலும், சாய்ராம் கல்லுாரி அணியின் ஆதிக்கம் தொடர்ந்தது. இறுதி போட்டியில் ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லுாரி அணி, பிரின்ஸ் கே.பத்மாவதி பொறியியல் கல்லுாரி அணியை எதிர்கொண்டது.

மூன்று ஆட்டங்களில் இரண்டு வெற்றி என்ற முறையில் நடைபெற்ற போட்டியில், சாய்ராம் அணி 2 - 0 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது. இதன் காரணமாக, மாநில போட்டிக்கு சாய்ராம் கல்லுாரி தேர்வாகியுள்ளது. கல்லுாரியின் உடற்கல்வி இயக்குனர் மற்றும் பயிற்சியாளரான குமார் பாராட்டினார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us