UPDATED : டிச 31, 2024 12:00 AM
ADDED : டிச 31, 2024 11:39 AM

சென்னை:
சென்னை அண்ணா பல்கலை மாணவியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளியை தமிழக அரசு காப்பாற்றக்கூடாது; முதல்வர் பதவியில் இருந்து ஸ்டாலின் விலக வேண்டும் என வலியுறுத்தி, டில்லியில், பா.ஜ.,வின் மாணவர் அமைப்பான, ஏ.பி.வி.பி., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சாணக்கியபுரியில் உள்ள தமிழ்நாடு இல்லம் முன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், ஏ.பி.வி.பி., அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் மாணவ - மாணவியர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் கூறுகையில், அண்ணா பல்கலை மாணவி மீதான பாலியல் வன்முறையை ஏற்க முடியாது.
இந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கும், ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கும் தொடர்பு உள்ளதாகவும், குற்றவாளிக்கு அந்த கட்சி பாதுகாப்பு கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. அதை ஏற்க முடியாது என்றனர்.