தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லுாரி மாணவர்களுக்கு போதை தடுப்பு விழிப்புணர்வு

கல்லுாரி மாணவர்களுக்கு போதை தடுப்பு விழிப்புணர்வு

கல்லுாரி மாணவர்களுக்கு போதை தடுப்பு விழிப்புணர்வு


UPDATED : ஆக 26, 2026 06:16 PM

ADDED : ஆக 26, 2026 06:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 26, 2026 06:16 PM ADDED : ஆக 26, 2026 06:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுராந்தகம்:
மதுராந்தகத்தில் கல்லுாரி மாணவ மாணவியருக்கு போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது.

மதுராந்தகம் அருகே உள்ள தனியார் கூடத்தில் கல்லுாரி மாணவ மாணவியருக்கான போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம், செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி., அய்மன் ஜமால் தலைமையில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்று தங்கள் கருத்துக்களை பகிர்ந்தனர்.

கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி., அய்மன் ஜமால் பேசியதாவது:


கல்லுாரிக்கு வரும் மாணவ மாணவியர், விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். இங்கு அமர்ந்திருக்கும் மாணவ மாணவியர் அனைவருக்கும் தனித்திறமைகள் உண்டு. ஆனால், தகாத பழக்கங்களால், தடம் மாறி போதை பொருட்களுக்கு அடிமையாகும் நில ஏற்படுகிறது.

கல்லுாரிகளில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்கான போலீஸ்காரர்களின், நடவடிக்கைகளுக்கு பேராசிரியர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். போதை பொருள் இல்லாத எதிர்காலத்தை உருவாக்க, கல்வி நிறுவனங்கள் இணைந்து செயல்பட வேண்டும்

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில், மதுராந்தகம் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, மதுராந்தகம் காவல் துணை கண்காணிப்பாளர் தீபக், கல்லுாரி பேராசிரியர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

அதே போல் செய்யூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பெண்கள் பாதுகாப்பு குறித்து மாணவியருக்கு சிங்கப்பெண் சிறப்பு படை போலீசார் நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில், சிங்கப்பெண் சிறப்பு படை துணை ஆய்வாளர் அமுதா பேசுகையில், “பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை, குடும்ப பிரச்னை உள்ளிட்டவை குறித்து, அலட்சியப்படுத்தாமல் காவல்துறையின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும்,” என்றார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us