UPDATED : ஆக 31, 2026 02:37 PM
ADDED : ஆக 31, 2026 02:38 PM
அ நிறம் | அளவு
கோவை:
ரோட்டரி கிளப் சார்பில் பீளமேடு மாநகராட்சி துவக்கப் பள்ளியில் 'போதை மற்றும் டிஜிட்டல் விழிப்புணர்வு நிகழ்ச்சி' நடந்தது. சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்ட 3206ன் உதவி ஆளுநர் ஜான் சிங்கராயர் பங்கேற்றார்.
மூத்த வழக்கறிஞர் வடிவேலு திருப்பதி, போதைப்பொருட்களால் ஏற்படும் உடல், மன மற்றும் சமூக பாதிப்புகளை விளக்கி அதில் இருந்து விலகி வாழ வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார்.
தலைமையாசிரியர் பரிமளா, ஆசிரியர்கள், மாணவர்கள், ரோட்டரி உறுப்பினர்கள் போதைக்கு எதிராகவும், டிஜிட்டலை பொறுப்புணர்வுடன் பயன்படுத்தவும் உறுதிமொழி ஏற்றனர்.
