அன்வேஷா 2.0 - அதிகாரபூர்வ புள்ளி விவரங்கள் குறித்த விநாடி வினா போட்டி
அன்வேஷா 2.0 - அதிகாரபூர்வ புள்ளி விவரங்கள் குறித்த விநாடி வினா போட்டி
UPDATED : ஜூலை 17, 2025 12:00 AM
ADDED : ஜூலை 17, 2025 08:49 AM
சென்னை:
அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் குறித்த தேசிய அளவிலான அன்வேஷா 2.0 விநாடி வினா போட்டி சென்னையில் வரும் ஜூலை 18 அன்று நடைபெறவுள்ளது. சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள மத்திய விரிவுரை அரங்கில் காலை 9.30 மணி முதல் இந்தப் போட்டி நடைபெறும்.
தேசிய மாதிரி அளவீட்டின் 75-வது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் போட்டியின் நோக்கம், சென்னை நகரில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் மாணவர்களிடையே புள்ளிவிவரங்கள் குறித்த ஆர்வத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதாகும்.
போட்டியில் வெற்றி பெறும் முதல் 3 அணிகளுக்கு முறையே ரூ.10,000, ரூ.6,000, ரூ.4,000 என ரொக்கப்பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும். வெற்றி பெறும் நிறுவனத்திற்கு கோப்பை ஒன்று வழங்கப்படும். பங்கேற்போர் அனைவரும் சான்றிதழ் பெறுவார்கள்.

