UPDATED : அக் 03, 2024 12:00 AM
ADDED : அக் 03, 2024 08:16 AM
அரவக்குறிச்சி:
மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, கூடுதல் கட்டடங்கள், கழிவறைகள் அமைத்து மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரவக்குறிச்சி, அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி, 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. ஆண்டுதோறும், 80 சதவீ-தத்திற்கும் மேல் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று வருகின்றனர். பத்தாம் வகுப்புக்கு மேல் இப்பள்ளியில் படிக்கும் மாணவிகள், தனியார் பள்ளிகளிலோ அல்லது அருகில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளிகளிலோ பயின்று வருகின்றனர்.
பத்தாம் வகுப்பிற்கு மேல் வேறு பள்ளிக்கு செல்ல முடியாமல், சில மாணவிகள் படிப்பை நிறுத்தி விடுகின்றனர். மேலும் பள்ளியில் போதிய கட்டட வசதி, கழிப்பிட வசதி இல்லாததால் மாணவிகள் சிரமப்படுகின்றனர். எனவே மாணவிகளின் எதிர்கால நலன் கருதி, உயர்நிலைப் பள்ளியாக செயல்பட்டு வரும், அரவக்குறிச்சி மகளிர் உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்-ளியாக தரம் உயர்த்த பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.