UPDATED : நவ 15, 2024 12:00 AM
ADDED : நவ 15, 2024 08:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மேம்பாட்டுக்காக சிறப்பாக செயல்படுவோருக்கு, தமிழக அரசால், ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினத்தன்று, டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2025ம் ஆண்டு விருதுக்கு தகுதியானோர் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை, சென்னை கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலகத்தில் பெற்று, இம்மாதம் 25ம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு, 73388 01253, 98414 70798 என்ற எண்களில் தொடர்புக் கொள்ளலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.