UPDATED : நவ 30, 2024 12:00 AM
ADDED : நவ 30, 2024 08:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
தமிழ் மொழி வளர்ச்சிக்கு பங்களிப்போருக்கு, தமிழ் வளர்ச்சித்துறை பல்வேறு விருதுகளை வழங்குகிறது.
அந்த வகையில், தமிழ் மொழி வளர்ச்சிக்கான மென்பொருள் மற்றும் செயலி உருவாக்குவோருக்கு, முதல்வர் கணினி தமிழ் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு, தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
கடந்த, 2021க்குப் பின் தயாரித்துள்ள மென்பொருள், செயலிகள் குறித்த விபரங்களுடன், www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தமிழ் வளர்ச்சி இயக்குனர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை- 08 என்ற முகவரிக்கு, டிச., 31க்குள் அனுப்ப வேண்டும்.