இந்திய மருத்துவம், ஓமியோபதி துறையில் காலி பணியிடத்துக்கு விண்ணப்பம் வரவேற்பு
இந்திய மருத்துவம், ஓமியோபதி துறையில் காலி பணியிடத்துக்கு விண்ணப்பம் வரவேற்பு
UPDATED : செப் 12, 2024 12:00 AM
ADDED : செப் 12, 2024 09:39 AM
நாமக்கல்:
இந்திய மருத்துவம், ஓமியோபதி துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்-ணப்பம் வரவேற்கப்படுகிறது என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் மாவட்டத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்பட்டு வரும், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ் இயங்கும், காலியாக உள்ள ஆயுஷ் மருத்துவ அலுவலர் (யுனானி)-1, ஆயுஷ் மருத்துவர் (சித்தா)-1, மருந்து வழங்குனர் (சித்தா)-5, மருந்து வழங்குனர் (ஆயுர்வேதா)-1, மருந்து வழங்-குனர் (யுனானி)--1, மருந்து வழங்குனர் (ஓமியோபதி)-2, பல்-நோக்கு மருத்துவமனை பணியாளர்-5, சிகிச்சை உதவியாளர் (பெண்)-1 ஆகிய பணிகளுக்கு, ஒப்பந்த அடிப்படையில் அரசு விதிகள்படி, மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலம் நிரப்பப்பட உள்ளது.மேற்காணும், காலி பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமி-ருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பதவிகளுக்-குரிய கல்வித்தகுதி மற்றும் இதர தகவல்களை பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள், நாமக்கல் மாவட்ட இணையதளம் (namakkal.nic.in) நாமக்கல் கலெக்டர் அலுவலகம், மாவட்ட சுகாதார அலுவலகம்.நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், அனைத்து சித்த மருத்துவ பிரிவுகள், மாவட்டத்திலுள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர ஆரம்ப சுகாதார நிலையங்களின் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளது.மேற்படி, பதவிக்கு தகுதி வாய்ந்த நபர்கள் உரிய படிவத்தில் கல்-வித்தகுதி, அனுபவச்சான்று மற்றும் இதர ஆவணங்களுடன் விண்ணப்பத்தை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ, வரும், 23க்குள், மாவட்ட சுகாதார அலுவலர், நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம், கலெக்டடர் அலுவலக வளாகம், நாமக்கல் மாவட்டம்-637003 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.