UPDATED : செப் 20, 2026 01:50 PM
ADDED : செப் 20, 2026 01:52 PM
சிவகங்கை:
கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொள்ள தகுதி வாய்ந்தவர்கள் இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆகாஷ் தெருவித்தார்.
அவர் கூறியதாவது:
கைவினைஞர் பயிற்சித்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் அகில இந்தியதொழிற் தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தனித்தேர்வராக விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் விண்ணப்ப படிவம், முழுவிவரங்கள் அடங்கிய விளக்க குறிப்பேடு மற்றும் தேர்வுகட்டணம் செலுத்துவதற்கான வழிகாட்டுதல் ஆகியவற்றை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
தேர்வு கட்டணம் ரூ.200யை www.karuvoolam.tn.gov.in என்ற இணையதளத்தின் வழியாக இ.செலான் மூலம் செலுத்தி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் விளக்க குறிப்பில் குறிப்பிட்டுள்ள மாவட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு முதனிலைத் தேர்வுக்கான எழுத்துத்தேர்வு நவ., 26 அன்று கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும். எழுத்துத்தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு மட்டும் செய்முறைதேர்வு நவ., 27 அன்று நடைபெறும்.
தேர்வு குறித்த முழு விவரங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். தேர்வு எழுத நாளை முதல் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி அக்., 9. கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம், என்றார்.
