தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


UPDATED : ஆக 04, 2025 12:00 AM

ADDED : ஆக 04, 2025 09:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 04, 2025 12:00 AM ADDED : ஆக 04, 2025 09:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை:
தேசிய சுகாதார திட்டத்தின் கீழ், கோவை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில், காலியாகவுள்ள தற்காலிக மருத்துவ பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆர்.பி.எஸ்.கே. திட்டத்தின் கீழ் மருந்தாளுநர்கள் 6 பேர், நிலை மூன்று லேப் டெக்னீசியன், செவிலியர்கள் 93 பேர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இப்பணி முழுவதும் தற்காலிகமானது.

டிப்ளமோ பார்மசி, இளநிலை பார்மசி அல்லது பார்ம் டி படித்தவர்கள் மருந்தாளுநர் பணிக்கும், லேப் டெக்னீசியன் பணிக்கு பிளஸ்2 முடித்து மெடிக்கல் லேபாரேட்ரி டெக்னாலஜி ஓராண்டு சான்றிதழ் படிப்பு படித்து இருக்கவேண்டும். இப்பணிக்கு 35 வயது அல்லது அதுக்கு கீழ் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

செவிலியர் பணிக்கு டிப்ளமோ நர்சிங், பி.எஸ்சி., நர்சிங் கல்வித்தகுதி பெற்று இருக்கவேண்டும். இதற்கு 50 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதியுள்ளவர்கள் விண்ணப்பங்களை, ஆக., 8ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விபரங்களுக்கு ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.

ஊட்டியில், செவித்திறன் குறை உடையோருக்கான, அரசு உயர்நிலைப் பள்ளியை நேரில் பார்வையிட்டு, 17 மாணவர்களுக்கு ஸ்வெட்டர், நோட்டுகள் வழங்கினர்.

ஆய்வுக்கு பின், குழு தலைவர் செல்வபெருந்தகை நிருபர்களிடம் கூறுகையில், சட்டசபை, 2024--26ம் ஆண்டிற்கான பொது கணக்கு குழு, மாவட்ட கலெக்டருடன் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து வருகிறது.

மலை மாவட்டத்தில் முன் மாதிரியான மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை அமைக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. மருத்துவமனை திறப்பு விழாவின்போது, குடிநீர் வசதி வேண்டி மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்.

அதன்படி, மாநில முதல்வர், 27.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் வசதியை பூர்த்தி செய்ய நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். நான்கு மாதத்திற்குள் பணி முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

மாணவர்கள், பாராமெடிக்கல் வகுப்பு, செவிலியர் வகுப்பு மற்றும் விளையாட்டு திடல் தேவை என, கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கைகள் அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us