UPDATED : அக் 01, 2024 12:00 AM
ADDED : அக் 01, 2024 02:14 PM

திருவள்ளூர்:
தமிழுக்கு தொண்டாற்றிய தமிழறிஞர்கள், ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழக அரசு தமிழ் வளர்ச்சி துறை சார்பாக, தமிழ் மொழிக்கு அருந்தொண்டாற்றி வரும் வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு, உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாதம் தோறும் 4,000 ரூபாய் உதவி தொகையாக வழங்கப்படுகிறது. அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயண சலுகையும், உதவித் தொகை பெற்றோர் மறைவுக்கு பின், அவரது வாரிசுதாரருக்கு 3,000 ரூபாயும் வழங்கப்படும்.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த வயது முதிர்ந்த தமிழறிஞர்கள், மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெறலாம். அல்லது, தமிழ் வளர்ச்சி துறை இணையதளமான ww.tamilvalarchithurai.tn.gov.inல், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, வரும் 31க்குள் திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.