10ம் வகுப்பு, பிளஸ் 1 உடனடி தேர்விற்கு 22ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
10ம் வகுப்பு, பிளஸ் 1 உடனடி தேர்விற்கு 22ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
UPDATED : மே 21, 2025 12:00 AM
ADDED : மே 21, 2025 09:10 AM

புதுச்சேரி :
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 உடனடி தேர்விற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.
பள்ளிக் கல்வி இயக்கக இணை இயக்குநர் சிவகாமி செய்திக்குறிப்பு:
10வது மற்றும் பிளஸ் 1 பொதுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாதவர்கள் வரும் ஜூலை மாதம் நடைபெறும் உடனடித் தேர்விற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை
தேர்வர்கள் அவரவர் படித்த பள்ளிகளில் வரும் 22ம் தேதி முதல் ஜூன் 4ம் தேதி வரை, காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) விண்ணப்பிக்கலாம்.
தனித்தேர்வர்கள் இதே நாட்களில் பிளஸ் 1 மாணவர்கள் முத்திரையர்பாளையம், முத்திரையர் மேல்நிலைப் பள்ளியிலும், மாணவிகள் செல்லபெருமாள்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் விண்ணப்பிக்க வேண்டும்.
10ம் வகுப்பு மாணவர்கள், ரெட்டியார்பாயைம் பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளியிலும், மாணவிகள் புதுச்சேரி இமாக்குலேட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணம் மற்றும் ஆன்-லைன் பதிவுக் கட்டணத்தினை சேவை மையத்தில் பணமாகச் செலுத்த வேண்டும். தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.