தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


UPDATED : அக் 23, 2026 01:50 PM

ADDED : அக் 23, 2026 01:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 23, 2026 01:50 PM ADDED : அக் 23, 2026 01:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:
பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

2026 - 27ம் ஆண்டில் உதவித்தொகை பெற தகுதியான கல்வி நிறுவனங்களில் 9,10, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் https://scholarships.gov.in என்ற இணைய தளத்தில் புதிதாக, பதிவை புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் மாணவர்கள் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு வெளியிட்டுள்ள கல்வி நிறுவனத்தில் படிக்க வேண்டும். ஏற்கனவே உதவித்தொகை பெற்று 10ம் வகுப்பு, பிளஸ் 2 படிப்பவர்கள் அக்.,31 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள் நவ.,15க்குள் சரிபார்க்க வேண்டும். 9, பிளஸ் 1 படிக்கும் மாணவர்கள் புதிதாக விண்ணப்பிப்பதற்கான தேதி இணையத்தில் வெளியிடப்படும். கூடுதல் விபரங்களை மேற்குறிப்பிட்ட இணையபக்கத்தில் தெரிந்து கொள்ளலாம் என கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us