தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாரதியார் பல்கலைக்கூடத்தில் விண்ணப்பங்கள் வரவேற்பு

பாரதியார் பல்கலைக்கூடத்தில் விண்ணப்பங்கள் வரவேற்பு

பாரதியார் பல்கலைக்கூடத்தில் விண்ணப்பங்கள் வரவேற்பு


UPDATED : ஆக 26, 2026 04:36 PM

ADDED : ஆக 26, 2026 04:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 26, 2026 04:36 PM ADDED : ஆக 26, 2026 04:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக்கூடத்தில், 2026 - 27ம் கல்வியாண்டிற்கான, முதுநிலைப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கையை துவங்கி உள்ளது.

புதுச்சேரி அரசால் நிறுவப்பட்டு, நிதியுதவி பெறும் அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக்கூடம், கலை நிகழ்த்துதலுக்கான மையத்தில், 2026 - 27ம் கல்வியாண்டிற்கான முதுநிலைப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது.

இங்கு, எம்.பி.ஏ., பரதநாட்டியம், எம்.பி.ஏ., இசை வீணை, வயலின், வாய்ப்பாட்டு, மிருதங்கம் ஆகிய சிறப்புப் பிரிவுகளிலும், எம்.வி.ஏ., நுண்கலை ஓவியம், விளம்பர கலைக் மற்றும் சிற்பம் ஆகிய பிரிவுகளிலும், முதுநிலைப் படிப்புகள் உள்ளன.

இரண்டு ஆண்டுகள், நான்கு பருவங்களைக் கொண்ட இப்பாடத்திட்டங்களில் செய்முறைப் பயிற்சி, கோட்பாடு, கலை நிகழ்வுகள், ஆராய்ச்சி மற்றும் படைப்பாற்றல் வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

அனுபவமிக்க ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் மாணவர்களுக்கு சிறப்பான கற்றல் சூழல் வழங்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட கலைத்துறையில் இளங்கலை பட்டம் பெற்ற பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

சேர்க்கைக்கான கடைசி நாள் செப்டம்பர் 11ம் தேதி ஆகும். குறைந்த எண்ணிக்கையிலான இடங்களே உள்ளதால், ஆர்வமுள்ள மாணவர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இசை, நாட்டியம் மற்றும் நுண்கலை இளங்கலையில் சேருவதற்கு விண்ணப்பிக்க தவறியவர்கள், செப்டம்பர் 11ம் தேதிக்கு முன்னதாக கல்லுாரி முதல்வரை நேரில் அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், விபரங்களுக்கு 0413 - 2600935 என்ற தொலைபேசி எண்ணிலும், bpkcollege@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us