தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொடக்க கல்வி பட்டய தேர்வு விண்ணப்பங்கள் வரவேற்பு

தொடக்க கல்வி பட்டய தேர்வு விண்ணப்பங்கள் வரவேற்பு

தொடக்க கல்வி பட்டய தேர்வு விண்ணப்பங்கள் வரவேற்பு


UPDATED : மார் 21, 2026 11:35 AM

ADDED : மார் 21, 2026 11:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 21, 2026 11:35 AM ADDED : மார் 21, 2026 11:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
தொடக்க கல்வி பட்டய தேர்விற்கு தனித் தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:



மே - ஜூன் நடக்க உள்ள தொடக்க கல்வி பட்டய தேர்விற்கு தனித்தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்பும் தனி தேர்வர்கள் ஏற்கனவே தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற அனைத்து மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களுடன் லாஸ்பேட்டையில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தின் வாயிலாக வரும் 26ம் தேதி முதல் அடுத்த மாதம் 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் பொருத்தப்பட்டுள்ள வெப் கேமரா வழியாக புகைப்படம் எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளதால் அந்த நிறுவனத்திலேயே புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து உரிய தேர்வு கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.

இந்த தேதிகளில் விண்ணப்பிக்காத தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தில் அடுத்த மாதம் 6 மற்றும் 7 ஆகிய இரு தேதிகளில் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பாடத்திற்கும் 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

முதலாமாண்டு மதிப்பெண் சான்றிதழ்க்கு 100 ரூபாய், இரண்டாமாண்டு மதிப்பெண் சான்றிதழ்க்கு 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், பதிவு, சேவை கட்டணமாக 15 ரூபாய், ஆன்லைன் பதிவு கட்டணம் 70 ரூபாய், சிறப்பு அனுமதி திட்டமான தக்கல் திட்டத்தின் கீழ், 1,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us