UPDATED : ஜூலை 09, 2026 05:28 PM
ADDED : ஜூலை 09, 2026 05:29 PM
அ நிறம் | அளவு
தேனி:
தேனி அருகே வடவீரநாயக்கன்பட்டியில் உள்ள கனரா வங்கி ஊரக சுயவேலை வாயப்பு பயிற்சி நிலையத்தில் ஜூலை 20 முதல் 30 நாட்கள் இலவச வீட்டு மின் வயரிங் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பயிற்சி பெற விரும்பும் 18 வயது நிரம்பிய கிராமப்புற ஆண், பெண் விண்ணப்பிக்கலாம். பயிற்சி, உணவு இலவசம். காலை 09:30 மணி முதல் 05:30 மணி வரை பயிற்சி அளிக்கப்படும்.
புகைப்படம், ஆதார் அட்டை நகல் ஜூலை 20க்கு முன் நேரில் சென்று முன்பதிவு செய்யலாம் எனவும் 95003 14193 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என சுயவேலை வாயப்பு பயிற்சி நிலைய இயக்குனர் ஆனந்த பாலாஜி தெரிவித்தார்.
