குரூப் - 2 தேர்வு சிறப்பு வகுப்புக்கு விண்ணப்பம் வரவேற்பு
குரூப் - 2 தேர்வு சிறப்பு வகுப்புக்கு விண்ணப்பம் வரவேற்பு
UPDATED : ஆக 17, 2026 03:49 PM
ADDED : ஆக 17, 2026 03:52 PM
அ நிறம் | அளவு
காஞ்சிபுரம்:
குரூப் - 2 தேர்வு சிறப்பு வகுப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா தெரிவித்துள்ளார்.
இது குறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா வெளியிட்ட செய்தி அறிக்கை:
காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாக வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில், குரூப் - 2 சிறப்பு பயிற்சி வகுப்புகள், நாளை மறுதினம் முதல் தொடங்கப்பட உள்ளன.
இந்த பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் பட்டதாரி இளைஞர்கள் ஆதார் நகல், போட்டோ உள்ளிட்ட ஆவணங்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
மேலும், கூடுதல் விபரங்களுக்கு 044 - 2723 7124 தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
