UPDATED : அக் 07, 2026 01:25 PM
ADDED : அக் 07, 2026 01:26 PM
நாமக்கல்:
நாமக்கல் கலெக்டர் மதுபாலன் வெளியிட்ட அறிக்கை:
அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழிற் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு, 2026 - 27ம் ஆண்டிற்கான, பிரதம மந்திரியின் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், அரசு, அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லுாரிகளில், மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும், மாணவ, மாணவியருக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
பாலிடெக்னிக், இளங்கலை (தொழிற்படிப்பு), முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் பயிலும் மாணவர்களுக்கு, குடும்ப ஆண்டு வருமானம், 2.50 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
2026 - 27ம் கல்வியாண்டில், மேற்படி கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான விண்ணப்பம், https://umis.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் பெறப்படுகிறது. தகுதியான மாணவர்கள், இணையதளம் மூலம், வரும், 21க்குள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
