UPDATED : ஆக 25, 2026 09:46 PM
ADDED : ஆக 25, 2026 09:47 PM
அ நிறம் | அளவு
கோவை:
வேளாண்மை உழவர் நலத்துறையின் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை திட்டத்தில் காலியாக உள்ள வட்டார தொழில்நுட்ப மேலாளர், உதவி தொழில்நுட்ப மேலாளர் பணியிடங்கள் தனியார் ஏஜென்ஸிகள் வாயிலாக நிரப்பப்பட உள்ளன.
தகுதியும், முன் அனுபவமும் உள்ள ஏஜென்ஸிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் தங்களது முன் அனுபவம், சேவை கட்டண விவரம், பதிவு எண் உள்ளிட்ட விவரங்களுடன் ஒப்பந்தப் புள்ளியை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை திட்ட அலுவலர் வேளாண்மை இணை இயக்குநர், தடாகம் ரோடு, ஜி.சி.டி. அஞ்சல், கோவை என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ வரும் 27ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
