இலவச ஜூவல்லரி டிசைனிங் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
இலவச ஜூவல்லரி டிசைனிங் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
UPDATED : ஜூலை 20, 2026 04:01 PM
ADDED : ஜூலை 20, 2026 04:03 PM
அ நிறம் | அளவு
தேனி:
தேனி கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் இலவச பேன்சி ஜூவல்லரி டிசைனிங் பயிற்சி ஜூலை 27 முதல் ஆக., 10 வரை நடக்கிறது.
பயிற்சியில் 18 வயதிற்கு மேற்பட்ட விருப்பமுள்ள கிராமப்புற ஆண்கள், பெண்கள், இதரர் பங்கேற்கலாம். பயிற்சி, உணவு, தங்குமிடம் இலவசம். பயிற்சி காலை 09:30 மணி முதல் மாலை 05:30 மணி வரை நடைபெறும்.
விருப்பமுள்ளோர் புகைப்படம், ஆதார் நகலுடன் ஜூலை 27க்குள் கருவேல்நாயக்கன்பட்டி கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலும், விபரங்களுக்கு 95003 14193 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி மைய இயக்குநர் ஆனந்த பாலாஜி தெரிவித்துள்ளார்.
