UPDATED : டிச 12, 2024 12:00 AM
ADDED : டிச 12, 2024 09:54 AM
சிதம்பரம்:
சிதம்பரம் நந்தனார் கல்விக் கழகத்தின் நிரந்தர தவைர், 19 ஆண்டுகளுக்கு பிறகு நியமிக்கப்பட்டுள்ளார்.
சிதம்பரம் நந்தனார் கல்வி கழக பொதுக்குழு கூட்டம், ஓமக்குளம் நந்தனார் மடத்தில் நடந்தது. கூட்டத்திற்கு நந்தனார் கல்வி கழக மூத்த உறுப்பினர் ரத்தினசாமி தலைமை தாங்கினார். மூத்த ஆலோசகர் டாக்டர் சங்கரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், அனைத்து உறுப்பினர்கள் ஆதரவுடன் கல்வி கழக தலைவராக மணிரத்தினம் நியமிக்கப்பட்டார். செயலாளராக திருவாசகம், பொருளாளராக ஜெயச்சந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
நிகழ்ச்சியில் டிரஸ்ட் செயலாளர் வினோபா, பொருளாளர் பன்னீர்செல்வம், கல்வி கழக உறுப்பினர்கள் இளைய அன்பழகன், கொத்தவாசல் அன்பழகன், ரங்கநாதன், கற்பனைச்செல்வம், திலகவதி, மணிவேல், பேராசிரியர் தெய்வநாயகம், சின்னத்துரை, செல்லப்பன், வாஞ்சிநாதன், இளையராஜா, பாலையா, விஸ்வநாதன், நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பாஸ்கரன் நன்றி கூறினார். இளைபெருமாளுக்கு பின், 19 ஆண்டுகளுக்கு பிறது, நிரந்தர தலைவராக மணிரத்தினம் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.