UPDATED : மே 21, 2025 12:00 AM
ADDED : மே 21, 2025 04:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சண்டிகர்:
பஞ்சாப் பல்கலை துணைவேந்தராக ஜக்தீப் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, பஞ்சாப் கவர்னர் குலாப் சந்த் கட்டாரியா பிறப்பித்துள்ளார். பதவியேற்ற நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு ஜக்தீப் இந்தப் பதவியை வகிப்பார்.
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், தீர்க்கமான மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட துணைவேந்தர் ஜக்தீப் சிங் தலைமையின் கீழ், பஞ்சாப் பல்கலை கல்வியில் ஒரு புதிய உயரத்தை எட்டும்.
பல்கலையின் மகிமையை ஜக்தீப் மீட்டெடுப்பார். கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. கல்வித் துறையை மேம்படுத்த குறிப்பிடத்தக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன, என கூறியுள்ளார்.