UPDATED : ஏப் 30, 2024 12:00 AM
ADDED : ஏப் 30, 2024 08:31 AM
ஈரோடு:
ஈரோடு நந்தா பொறியியல் கல்லுாரி மற்றும் தொழில் நுட்ப கல்லுாரிகளில் நடப்பு கல்வியாண்டில் பல்வேறு பன்னாட்டு, தேசிய நிறுவனங்கள் மூலமாக வேலை வாய்ப்பு பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது.
ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமை வகித்தார். அறக்கட்டளை செயலாளர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவன செயலாளர் திருமூர்த்தி, முதன்மை கல்வி அதிகாரி ஆறுமுகம் முன்னிலை வகித்து பேசினர்.
சிறப்பு அழைப்பாளரான துாத்துக்குடி சதர்ன் பெட்ரோ கெமிக்கல் இன்டஸ்டிரிஸ் நிறுவன மனிதவள மேம்பாட்டு தலைவர் சிவக்குமார் ஜெயராமன், 118க்கும் மேற்பட்ட பன்னாட்டு மற்றும் தேசிய நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்ற, 1,516 மாணவ-மாணவியருக்கு பணி நியமன உறுதி சான்றிதழ் வழங்கி பேசினார். விழாவில் நந்தா பொறியியல் கல்லுாரி முதல்வர் ரகுபதி, நந்தா தொழில் நுட்ப வளாக நிர்வாக அதிகாரி வேலுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.