தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சங்கரா கல்லுாரியில் மாணவ மாணவியர் 27 பேருக்கு பணி நியமன ஆணை

சங்கரா கல்லுாரியில் மாணவ மாணவியர் 27 பேருக்கு பணி நியமன ஆணை

சங்கரா கல்லுாரியில் மாணவ மாணவியர் 27 பேருக்கு பணி நியமன ஆணை


UPDATED : மார் 10, 2026 02:06 PM

ADDED : மார் 10, 2026 02:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 10, 2026 02:06 PM ADDED : மார் 10, 2026 02:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நேற்று நடந்த நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்ற 27 மாணவ, மாணவியருக்கு பணி நியமனை ஆணை வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் தொடர் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னையைச் சேர்ந்த 'ஏஸ் பின்ஸ்டெக்' என்ற நிறுவனம் தங்களின் நிறுவனத்திற்கு தேவையான நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக நேர்முக தேர்வை நேற்று கல்லுாரியில் நடத்தியது.

இத்தேர்வில் வெற்றி பெற்ற 27 மாணவ, மாணவியருக்கு கல்லுாரி முதல்வர் கலைராம வெங்கடேசன் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் 'ஏஸ் பின்ஸ்டெக்' நிறுவனத்தின் மனிதவள நிர்வாகி ஸ்ரீஹரி, கல்லுாரி துறை தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, வெங்கடேசன், மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us