டிப்ளமோ நர்சிங் மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கல்
டிப்ளமோ நர்சிங் மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கல்
UPDATED : நவ 08, 2026 02:35 PM
ADDED : நவ 08, 2026 02:36 PM
புதுச்சேரி:
காரைக்கால் மதர் தெரசா செவிலியக் கல்லுாரியில் டிப்ளமோ நர்சிங் படித்த மாணவர்கள் 17 பேருக்கு முதல்வர் ரங்கசாமி பணி நியமன ஆணையை வழங்கினார்.
மதர் தெரசா முதுநிலை மற்றும் ஆராய்ச்சி சுகாதார அறிவியல் நிறுவனத்தின் காரைக்கால் கிளையில் பயின்ற டிப்ளமோ நர்சிங் மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
சென்னையில் உள்ள டாக்டர் மெத்தா மருத்துவமனை சார்பாக நடந்த வேலை வாய்ப்பு முகாமில், டிப்ளமோ நர்சிங் படித்த 17 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து, வேலை வாய்ப்பு பெற்ற 17 மாணவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி பணி நியமன ஆணையை நேற்று வழங்கினார். இதில், மதர் தெரசா முதுநிலை மற்றும் ஆராய்ச்சி சுகாதார அறிவியல் நிறுவனத்தின் டீன் அய்யப்பன், காரைக்கால் கிளையின் முதல்வர் மஞ்சுபாலா தாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
