UPDATED : ஜன 10, 2026 09:12 AM
ADDED : ஜன 10, 2026 09:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை:
உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளியில் அரையாண்டுத்தேர்வில், உயர் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச்சான்றிதழும், நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, பள்ளிச்செயலர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் சுப்ரமணியம் முன்னிலை வகித்தார். உதவி தலைமையாசிரியர் சேஷநாராயணன் வரவேற்றார்.
அரையாண்டுத்தேர்வில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பில், முதல் மூன்று இடம் மற்றும் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றவர்களுக்கு கோவை கற்பகம் கல்லுாரி ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் தீபாகரோலின், அட்லி பிரின்சி, கணினித்துறை பேராசிரியர் ஆனந்தசிலம்பரசன் ஆகியோர் பரிசு வழங்கினர். பட்டதாரி உதவி தலைமையாசிரியர் குமரேசேன் நன்றி தெரிவித்தார்.

