தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொழிற்பயிற்சி பழகுநர் முகாம் புதுச்சேரியில் வரும் 10ம் தேதி துவக்கம்

தொழிற்பயிற்சி பழகுநர் முகாம் புதுச்சேரியில் வரும் 10ம் தேதி துவக்கம்

தொழிற்பயிற்சி பழகுநர் முகாம் புதுச்சேரியில் வரும் 10ம் தேதி துவக்கம்


UPDATED : ஆக 07, 2026 10:19 AM

ADDED : ஆக 07, 2026 10:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 07, 2026 10:19 AM ADDED : ஆக 07, 2026 10:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
புதுச்சேரியில் பிரதம மந்திரி தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் நடக்கிறது.

இது குறித்து ஐ.டி.ஐ., முதல்வர் அழகானந்தன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் மற்றும் புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை துணை தொழில் பழகுநர் ஆலோசகர் அலுவலகம் சார்பில், பிரதம மந்திரி தேசிய தொழில் பழுகுநர் சேர்க்கை முகாம் நடக்கிறது. மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் 10ம் தேதி காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை நடக்கிறது.

இதில், புதுச்சேரியில் உள்ள மத்திய, மாநில நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில், 5ம் வகுப்பு முதல், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், ஐ.டி.ஐ., சான்றிதழ் பெற்றவர்கள், டிப்ளமா, பொறியியல் பட்டாதாரிகள் மற்றும் பட்டதாரி சான்றிதழ் பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்.

என்.சி.வி.டி., மற்றும் எஸ்.சி.வி.டி., முறையில், அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ.,யில் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் தொழில் பழகுனர் பயிற்சி பெற்று, சான்றிதழ் பெறலாம். தொழில் பழகுனர் பயிற்சியில் சேரும் அனைவருக்கும் மாதாந்திர ஊக்க தொகையாக 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை வழங்கப்படும்.

ஐ.டி.ஐ., முடித்தவர்களுக்கு எழுத்து தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும். தேசிய தொழில் பழகுநர் சான்றிதழ் பெற்றவர்கள் ஐ.டி.ஐ., சான்றிதழ் பெற்றவர்களை விட திறன் மிக்கவராக கருதப்படுவர். நாக் சான்றிதழ் மத்திய, மாநில அரசு மற்றும் பொது துறை நிபறுவனங்களில் வேலை பெறுவதற்கும், உலக அளவிலான நிறுவனங்களில், வேலை பெறுவதற்கும் அங்கீகரிக்கப்பட்ட மத்திய அரசு சான்றிதழ் ஆகும்.

நாக் சான்றிதழ் பெற்றவர்களுக்கு அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். முகாமில் கலந்து கொள்ள வரும் ஐ.டி.ஐ., முடித்தவர்கள் தங்கள் என்.சி.வி.டி., சான்றிதழ் ஆதார் கார்டு, பாஸ்போர்ட் அளவு போட்டோ, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட் ஆவணங்களை கொண்டு வர வேண்டும்.

மேலும், விபரங்களுக்கு அருகில் உள்ள உதவி தொழில் பழகுநர் ஆலோசகர் அலுவலகம் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களை அனுகலாம்.

இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us