UPDATED : ஜூலை 07, 2025 12:00 AM
ADDED : ஜூலை 07, 2025 08:42 AM
சென்னை:
78 டாக்டர்கள், 56 நர்ஸ்களை நிரந்தர நியமனம் செய்யவும், 400 மருத்துவ பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க அரசு ஒப்புதளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்ட, அரசாணையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் புதிதாக, 28 ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்கள், 22 நகர்ப்புற சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் என, சட்டசபையில் அமைச்சர் அறிவித்தார்.
அதன்படி, தேசிய சுகாதாரத் திட்ட இயக்குனர் மற்றும் பொது சுகாதாரத் துறை இயக்குனர் சார்பில், அங்கு பல்வேறு பணி நியமனங்களுக்கான பரிந்துரைகள் அனுப்பப்பட்டன. அதை பரிசீலித்த அரசு, 78 டாக்டர்கள், 56 நர்ஸ்களை நிரந்தர நியமனம் செய்யவும், 400 மருத்துவ பணியாளர்களை, ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கவும், ஒப்புதல் அளித்துள்ளது.
அவர்களுக்கான ஊதியம் மற்றும் இதர படி விபரங்களுக்கும், அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.