UPDATED : ஜூன் 15, 2024 12:00 AM
ADDED : ஜூன் 15, 2024 10:32 AM
திருப்பூர் :
மேல்நிலை கல்விக்கு செல்லும் அரசு பள்ளி மாணவ, மாணவியரின் திறனை கண்டறிந்து, அவர்களை ஊக்குவிக்கும் வகையில், நடப்பு கல்வியாண்டுக்கான, முதல்வர் திறனாய்வுத்தேர்வு ஜூலை, 21ம் தேதி நடத்தப்படுகிறது.
தேர்வெழுத மாணவ, மாணவியர் பள்ளி தலைமை ஆசிரியர் ஊக்கப்படுத்தி, உரிய அறிவுரைகளை வழங்கிட வேண்டும். தேர்வு தொடர்பான அறிவிப்பினை மாணவர்கள் தெரியும் வண்ணம் அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும்.
மாநில பாடத்திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயின்று, தற்போது, 2024 - 2025ம் கல்வியாண்டில், அரசு பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம், வரும், 26 ம் தேதி வரை விண்ணப்பம் பெறலாம்.
இணையதளத்தில் பெறும் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேர்வு கட்டணம், 50 ரூபாய் சேர்த்து, பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்க வேண்டும். இது தொடர்பாக, அரசு தேர்வுகள் இயக்கம் தரப்பில் இருந்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

