sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிப்பை நிரூபித்தால் ரூ.ஒரு லட்சம்: அர்ஜூன்சம்பத் அறிவிப்பு

/

தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிப்பை நிரூபித்தால் ரூ.ஒரு லட்சம்: அர்ஜூன்சம்பத் அறிவிப்பு

தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிப்பை நிரூபித்தால் ரூ.ஒரு லட்சம்: அர்ஜூன்சம்பத் அறிவிப்பு

தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிப்பை நிரூபித்தால் ரூ.ஒரு லட்சம்: அர்ஜூன்சம்பத் அறிவிப்பு


UPDATED : பிப் 22, 2025 12:00 AM

ADDED : பிப் 22, 2025 10:24 AM

Google News

UPDATED : பிப் 22, 2025 12:00 AM ADDED : பிப் 22, 2025 10:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:
தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிப்பு இருப்பதாக நிரூபித்தால் ரூ.ஒரு லட்சம் சன்மானம் வழங்குவோம் என ஹிந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.

உலக தாய் மொழி தினத்தையொட்டி ஹிந்து மக்கள் கட்சி சார்பில் மதுரை தமுக்கத்தில் உள்ள தமிழன்னை சிலைக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத், தேசிய கல்விக் கொள்கை 2020' என்ற தமிழாக்க புத்தகத்தை வைத்து பூஜை செய்து வெளியிட்டார். மாநில துணைத் தலைவர் பாலன், மாவட்ட தலைவர் சோலைகண்ணன், செயலாளர் கோவில் செல்வம், வராஹி சுவாமிகள் மற்றும் பிராமணர் சங்கத்தினர் பலர் பங்கேற்றனர்.

பின்னர் அர்ஜூன் சம்பத் கூறியதாவது:


தமிழகத்தில் எங்கும் தமிழ், எதிலும் தமிழ், எப்போதும் தமிழ் என்பது நிலைநாட்டப்பட வேண்டும். ஆங்கிலம் இன்று தமிழில் ஆதிக்கம் செலுத்துகிறது. மழலைக் கல்வியில் தமிழை பயிற்று மொழியாக்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை. அவ்வாறு இல்லாதது வேதனை அளிக்கிறது.

5ம் வகுப்பு வரை தமிழ்தான் இருக்க வேண்டும். 5ம் வகுப்புக்குமேல் மும்மொழிக் கொள்கை என்பது வரவேற்கத் தக்கது. பிரதமர் அறிமுகப்படுத்திய தேசிய கல்விக் கொள்கை தாய்மொழிக் கல்வியை வலியுறுத்துகிறது. இந்த தேசிய கல்விக் கொள்கையில் எந்த இடத்திலும் ஹிந்தி திணிப்பு என்பது இல்லை. ஹிந்தி திணிப்பு இருக்கிறது என நிரூபிப்பவருக்கு ரூ.ஒரு லட்சம் சன்மானம் வழங்க தயாராக உள்ளோம்.

தமிழ்நாட்டில் தமிழ் படிக்காமலேயே பட்டம் வாங்கும் நிலை உள்ளது. 2006 கருணாநிதி ஆட்சியில் கட்டாய தமிழ்ப்பாட சட்டத்தை அறிமுகப்படுத்தினார். அந்நிலையில், சிலர் தாங்கள் உருது படிப்பதாக கூறினர். அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. பின்னர் வந்த அ.தி.மு.க., ஆட்சியில் மற்றொரு சிறுபான்மையினர் கட்டாய தமிழ்ப்பாட சட்டத்தை ஏற்க மறுத்ததால் அவர்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டது. இது எந்த வகையில் நியாயம்.

தமிழகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை உள்ளதா. வர்த்தக நிறுவனங்கள், அரசு அலுவலக பெயர் பலகைகளை தமிழில் எழுத வேண்டும் என சட்டம் உள்ளது. ஆனால் அரசு நிறுவனங்களிலேயே இதை மீறுகின்றனர்.

புதுச்சேரி, மொரீசியஸ், மலேசியா என பல இடங்களிலும் பல தமிழ்த்தாய் வாழ்த்துகள் உள்ளன. தமிழகத்தில் மனோன்மணீயம் சுந்தரனார் பாடலில் சில வரிகளை நீக்கி வைத்துள்ளனர். தமிழ்த்தாய் வாழ்த்தை, பாரதியார் பாடல், தேவாரம், திருவாசகம், மீனாட்சியம்மன் பிள்ளைத்தமிழ் போன்றவற்றில் இருந்து எடுத்து மாற்றி அமைக்க வேண்டும்.

மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம் என்பது சரியே. ஏனெனில் பி.எம்.ஸ்ரீ பள்ளிகளுக்கு கையெழுத்து போட்டுவிட்டு, அந்தப் பள்ளிகள் நடந்ததாக அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர்களைக் காட்டி நிதியை ஏமாற்றி பெற்றுள்ளனர். இவர்கள் கையில் நிதி கொடுக்கக் கூடாது.

தமிழ்நாட்டில் மத்திய அரசின் நிதியை தவறாக பயன்படுத்துகின்றனர். எனவே தமிழக அரசு பள்ளிகளை தேசிய உடைமையாக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கென தனிப்பள்ளிக் கல்வித்துறை எதற்கு. திருப்பரங்குன்றம் பிரச்னை, பாலியல் பிரச்னை, பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்ற பிரச்னைகளில் திசை திருப்ப ஹிந்திப் பிரச்னையை எப்போதும் கையில் வைத்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us