UPDATED : ஜூன் 01, 2025 12:00 AM
ADDED : ஜூன் 01, 2025 08:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில், கோடை விடுமுறைக்குப்பின் நாளை (2ம் தேதி) பள்ளிகள் திறக்கப்படுவதால் புத்தகங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
கோடை விடுமுறைக்குப்பின் நாளை (2ம் தேதி) பள்ளிகள் திறக்கப்படுகிறது. அதனையொட்டி, பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் துாய்மைப் பணியாளர்களை கொண்டு பள்ளி வளாகங்கள் மற்றும் வகுப்பறைகள், பெஞ்ச், நாற்காலி போன்றவை சீர்படுத்தி தயார்படுத்தினர்.
பள்ளியில் உள்ள மின் சாதனங்கள், உபகரணங்கள் போன்றவற்றின் நிலையை பார்வையிட்டு சீர்படுத்தும் பணிகள் நடந்தது. பள்ளி திறந்தவுடன், மாணவர்களுக்கு வழங்க வேண்டிய இலவச நோட்டு, புத்தகங்கள், சீருடைகள் போன்றவற்றை தயார்படுத்தி வைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.