தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகளுக்கான கலைப்போட்டிகள்

பள்ளிகளுக்கான கலைப்போட்டிகள்

பள்ளிகளுக்கான கலைப்போட்டிகள்


UPDATED : ஆக 21, 2026 04:12 PM

ADDED : ஆக 21, 2026 04:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 21, 2026 04:12 PM ADDED : ஆக 21, 2026 04:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை:
உடுமலை லயன்ஸ் சங்கம் சார்பில், சுதந்திர தினத்தையொட்டி பள்ளிகளுக்கு இடையிலான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

போட்டிகளை உடுமலை லயன்ஸ் சங்கத்தலைவர் சந்திரசேகர் துவக்கி வைத்தார். உடுமலை சுற்றுப்பகுதிகளை சேர்ந்த, 31 பள்ளிகள் பங்கேற்றன. பல்வேறு கலைப்போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில், முதல் பரிசை ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும், இரண்டாம் பரிசை ஆர்.கே.ஆர்., குருவித்யா பள்ளியும், மூன்றாவது பரிசை சீனிவாசா மேல்நிலைப் பள்ளியும் பெற்றன.

வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், லயன்ஸ் முன்னாள் கவர்னர் குருநாதன், நிகழ்ச்சி சேர்மன் குருராஜ மூர்த்தி, முன்னாள் தலைவர் ராஜகோபால், செயலாளர்கள் சிவகுமார், சிதம்பரநாதன், ராஜசேகர், பொருளாளர் ரமேஷ் குமார் மற்றும் அனைத்து லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us