UPDATED : ஆக 18, 2025 12:00 AM
ADDED : ஆக 18, 2025 08:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
ஐ.பி.எம்., நிறுவனம், மாணவர்களுக்கு ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், கிளவுட் கம்ப்யூட்டிங் சார்ந்த இன்டெர்ன்ஷிப் பயிற்சியை வழங்குகிறது .
பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான, ஐ.பி.எம்., நிறுவனத்தின், ஸ்கில் பில்ட் அகாடமி சார்பில், பி.இ., பி.டெக்., எம்.சி.ஏ., உள்ளிட்ட துறை மாணவர்களுக்கான, ஆறு வார இன்டெர்ன்ஷிப் பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதில், செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், கிளவுட் கம்ப்யூட்டிங் ஆகியவற்றில் நேரடி பயிற்சி வழங்கி, அங்கீகார சான்றிதழ் வழங்கப்படும். ஆர்வம் உள்ள மாணவர்கள், aicte என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

