தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கலை பண்பாட்டு துறை பயிற்சி முகாம் நிறைவு

கலை பண்பாட்டு துறை பயிற்சி முகாம் நிறைவு

கலை பண்பாட்டு துறை பயிற்சி முகாம் நிறைவு


UPDATED : ஜன 05, 2026 03:06 PM

ADDED : ஜன 05, 2026 03:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 05, 2026 03:06 PM ADDED : ஜன 05, 2026 03:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்:
கலை பண்பாட்டுத் துறை நடத்திய குளிர்கால பயிற்சி முகாம் நிறைவடைந்தது. இதில் பங்கேற்ற மாணவ - மாணவியருக்கு, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, சான்றிதழ்களை வழங்கினார்.

தமிழக அரசின் கலை பண்பாட்டு துறை சார்பில், காஞ்சிபுரம் மண்டல கலை பண்பாட்டு மையமும், ஜவகர் சிறுவர் மன்றமும் இணைந்து, பள்ளி மாணவ - மாணவியரின் அரையாண்டு விடுமுறையை ஆக்கப்பூர்வமாகவும், பயனுள்ளதாகவும், மாநில அளவிலான குளிர்கால கலைப்பயிற்சி முகாம், கடந்த டிச.,25 முதல் ஜன.,3 வரை, 10 நாட்கள் நடந்தது.

இந்த பயிற்சியில் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கைவினை, நாட்டுப்புறக் கலை ஆகியவற்றில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த,
100 மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.

சதாவரத்தில் உள்ள செவித்திறன் குறைபாடு உடையோருக்கான உயர்நிலைப் பள்ளியில், பயிற்சி நிறைவு விழா நேற்று நடந்தது. பயிற்சின் விளைவாக மாணவ - மாணவியர் வரைந்த ஓவியங்கள் மற்றும் கைவினை பொருள்கள் கண்காட்சியாக வைத்திருந்தனர். காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, கண்காட்சியை பார்வையிட்டார்.

குரலிசை, பரதநாட்டியம், நாட்டுப்புறக் கலை, கைச்சிலம்பம் நிகழ்ச்சியை பார்வையிட்டு, பயிற்சி பெற்ற மாணவ - மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ்
வழங்கினார்.

இந்நிகழ்வில், கலை பண்பாட்டுத் துறை மண்டல உதவி இயக்குநர் கார்த்திகேயன், மாவட்ட அரசு இசைப் பள்ளி தலைமையாசிரியர் ரமணி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us