11 மாவட்டங்களில் கலை, அறிவியல் கல்லுாரிகள் துவக்கம்
11 மாவட்டங்களில் கலை, அறிவியல் கல்லுாரிகள் துவக்கம்
UPDATED : மே 27, 2025 12:00 AM
ADDED : மே 27, 2025 03:58 PM

சென்னை:
தமிழகத்தில் புதிதாக, 11 கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளை, முதல்வர் ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் கோவி.செழியன், ராஜா, தலைமை செயலர் முருகானந்தம், உயர்கல்வித்துறை செயலர் சமயமூர்த்தி, கல்லுாரி கல்வி ஆணையர் சுந்தரவல்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதிய கல்லுாரிகளில், தலா ஐந்து பாடப்பிரிவுகள் நடத்தப்பட உள்ளன. ஒவ்வொரு கல்லுாரிக்கும் முதலாம் ஆண்டுக்கு, 12 பேர் வீதம் மொத்தம், 132 உதவி பேராசிரியர்கள்; 14 பேர் வீதம், 154 ஆசிரி யர் அல்லாத பணியிடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.
இக்கல்லுாரிகளின் செலவிற்காக, 25.2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இவற்றில் ஆண்டுக்கு. 3,050 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். புதிய கல்லுாரிகளுடன் சேர்த்து, தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளின் எண்ணிக்கை, 176 ஆக உயர்ந்துள்ளது.
புதிய கல்லுாரிகள் விபரம்:
கடலுார்- பண்ருட்டி; நீலகிரி- குன்னுார்; திண்டுக்கல்- நத்தம்; சென்னை- ஆலந்துார்; விழுப்புரம்- விக்கிரவாண்டி; செங்கல்பட்டு- செய்யூர்; சிவகங்கை- மானாமதுரை; திருவாரூர்- முத்துப்பேட்டை; தஞ்சாவூர்- திருவிடைமருதுார்; பெரம்பலுார்-கொளக்காநத்தம்; துாத்துக்குடி- ஓட்டப்பிடாரம்

