UPDATED : அக் 13, 2025 07:42 AM
ADDED : அக் 13, 2025 07:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:
கோவை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில், காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக, விண்ணப்பங்கள் இணையவழியில் பெறப்பட்டன.
தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு எழுத்து தேர்வு, நேற்று காலை 10 முதல் மதியம் 1 மணி வரை, நவ இந்தியா இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மையத்தில் நடந்தது. கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளரும், மேலாண் இயக்குனருமான ராமகிருஷ்ணன் பார்வையிட்டார். தேர்வில், 73 சதவீதம் பேர் பங்கேற்றனர்.