தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவ, மாணவியருக்கு தடகள போட்டிகள்

மாணவ, மாணவியருக்கு தடகள போட்டிகள்

மாணவ, மாணவியருக்கு தடகள போட்டிகள்


UPDATED : செப் 07, 2026 10:17 PM

ADDED : செப் 07, 2026 10:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 07, 2026 10:17 PM ADDED : செப் 07, 2026 10:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட தடகள சங்கம் சார்பில், 56வது காஞ்சிபுரம் மாவட்ட அளவிலான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் மாணவ, மாணவியருக்கு நேற்று நடந்தது.

காஞ்சிபுரம் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கில், நேற்று நடந்த ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடக்க விழாவிற்கு, காஞ்சிபுரம் மாவட்ட தடகள சங்க தலைவர் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தார்.

காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா, காஞ்சிபுரம் எஸ்.பி., அரவிந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி போட்டிகளை தொடங்கி வைத்தார்.

அரசு பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகளில் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். முதல் மூன்று இடம் பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்று, ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us