மேடவாக்கம் பள்ளி விழாவில் த.வா.உ., நிர்வாகி மீது தாக்குதல்
மேடவாக்கம் பள்ளி விழாவில் த.வா.உ., நிர்வாகி மீது தாக்குதல்
UPDATED : ஏப் 08, 2024 12:00 AM
ADDED : ஏப் 08, 2024 09:14 AM
மேடவாக்கம்:
மேடவாக்கத்தில், தனியார் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்ற தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகியை, அதே கட்சியை சேர்ந்த நபர்கள் தாக்கினர். இதில், நிர்வாகியின் மண்டை உடைந்தது.
தாம்பரம் அருகே மாடம்பாக்கம், சுதர்சன் நகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் முருகன், 50. தமிழக வாழ்வுரிமை கட்சி, செங்கல்பட்டு மாவட்ட செயலராக பொறுப்பு வகிக்கிறார்.
இவர், நேற்று முன்தினம், மாலை மேடவாக்கம், ரங்கநாதபுரம், தனியார் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். அதே கட்சியை சேர்ந்த, பம்மல் பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவரும் தன் ஆதரவாளர்களுடன் அந்நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார்.
இரவு 10:00 மணி அளவில் நிகழ்ச்சி முடிந்து வெளியேறும் போது, முன் விரோதம் காரணமாக, முருகன், மகேஷ் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மகேஷின் ஆதரவாளர்கள் 20 பேர் சேர்ந்து, முருகனை தாக்கி, தப்பினர். இதில், முருகன் மண்டை உடைந்து, காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். சம்பவம் குறித்து மருத்துமனை நிர்வாகம் பள்ளிக்கரணை போலீசாருக்கு அளித்த தகவல்படி, முருகனிடம் புகாரை பெற்ற போலீசார், சதீஷ் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.